ரூ. 10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு அவகாசம் வழங்கலாமா? - ‘லைகா’ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

விஷால்
விஷால்
Updated on
1 min read

சென்னை: ரூ.10 கோடி டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது குறித்து லைகா நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைகா நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ.21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தும்படி நடிகர் விஷாலுக்கு, உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், நடிகர் விஷால் ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய மேலும் 6 வார காலம் அவகாசம் வழங்க வேண்டுமென விஷால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், “நடிகர் விஷாலுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் நீதிமன்றம் டெபாசிட் செய்ய உத்தரவிட்ட ரூ.10 கோடியை செலுத்த மேலும் 6 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும்” என கோரி்னார்.

அதையடுத்து நீதிபதிகள், விஷாலுக்கு காலஅவகாசம் வழங்குவது குறித்து லைகா நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

விஷால்
தவெகவை குறைத்து மதிப்பிடுகிறதா திமுக, அதிமுக?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in