

என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியாக வெற்றி நடித்துள்ள படம் ‘பரீட்’. நாயகிகளாக அக் ஷிதா, சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜான் ராபின்ஸ் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை கே.வி.கிரண் கவனிக்கிறார். ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன், மஹேந்தர் குமார் தயாரித்துள்ளனர். ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி, இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
“என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர், தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளைச் சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது” எனப் படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.