

சென்னை: 'பிக் பாஸ் தமிழ் சீசன் 10' பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பார்கிறது.
நிகழ்ச்சி தொடங்கியதும், புதிய பிக் பாஸ் வீட்டை விஜய் சேதுபதி மெட்டா கண்ணாடி பார்வையாளர்களுக்கு சுற்றிக்காட்டினார். இந்த முறை ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி அறைகள் இல்லாமல், பொதுவான ஒரே ஒரு பெரிய படுக்கையறை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டப் பகுதி முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொதுமக்களிலிருந்து போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட 'தி காமன் மேன்' நிகழ்ச்சியிலிருந்து தேர்வான ஷாமா, முனியம்மாள் மற்றும் ஜேசன் கௌஷி ஆகிய மூவர் உட்பட மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்த சீசனின் போட்டியாளர்கள் பட்டியல்:
லக்ஷ்மி பிரியா (சின்னத்திரை நடிகை - 'மகாநதி' தொடர்)
சாத்திகா (நடிகை)
பிரித்விநாத் (நடிகர்)
ஜாவீத் ஷெரிப் (நடிகர்)
ஜேசன் கௌஷி ('தி காமன் மேன்' மூலமாகத் தேர்வானவர்)
முனியம்மாள் ('தி காமன் மேன்' மூலமாகத் தேர்வானவர்)
ஷாமா ('தி காமன் மேன்' மூலமாகத் தேர்வானவர்)
முத்தழகி (மாடலிங் / 'மிஸ் பெங்களூர் 2021' பட்டம் வென்றவர்)
அஸ்மிதா நீலமேகம் (மேக்கப் ஆர்ட்டிஸ்ட் / சமூக வலைதளப் பிரபலம்)
அவினாஷ் அசோக் (சின்னத்திரை நடிகர் - 'கயல்' தொடர்)
பிளாக் பாண்டி (நகைச்சுவை நடிகர் - 'கனா காணும் காலங்கள்' / 'அங்காடித் தெரு')
வினோத்பாபு (சின்னத்திரை நடிகர் / எழுத்தாளர்)
சாந்தினி தமிழரசன் (நடிகை)
சவின்யா வேலு (நடிகை)
குமரன் தங்கராஜன் (சின்னத்திரை நடிகர் / நடனக் கலைஞர்)
ராகவ் ரங்கநாதன் (நடிகர் / நடனக் கலைஞர்)
தன்யா (சமூக வலைதள பிரபலம்/ 'ரிசார்ட்' வெப் தொடர்)
முகேஷ் எம்.கே (திரைப்பட நடிகர்)
‘அடாவடி’ அன்சார் (சின்னத்திரை நடிகர் / நகைச்சுவைக் கலைஞர் - 'குக் வித் கோமாளி'