

நடிகர் ஏகன்
ஏகன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘ஹைக்கூ’. இதில் தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி, மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் நாயகிகளாக நடித்துள்ளனர்.
அதிர்ச்சி அருண், மைம் கோபி, இந்துமதி, ஜென்சன், இஸ்மத் பானு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சித்துகுமார் இசை அமைத்துள்ளார்.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. “கேரளாவின் எருமேலி பகுதியில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது. கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படமாக்கப்பட்டது.
முக்கியமான காட்சிகளுக்காக 3 பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ஈசிஆர் கோவளம் கடற்கரைப் பகுதியில் நிறைவடைந்தது. உணர்ச்சிப்பூர்வமான திரையரங்கு அனுபவத்தை இப்படம் வழங்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.