சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்
Updated on
1 min read

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாயகி விவகாரம் தகவலாக இருந்ததை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

‘சேயோன்’ படத்தில் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கவுள்ளார். இதன் முழு படப்பிடிப்பையும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். அக்டோபரில் பட வெளியீடு என்பதை படத்தின் அறிமுக வீடியோவில் தெரியப்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்
“விஜய் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்” - இயக்குநர் சேரன் உருக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in