‘விவேக் மூலம் நடிகரானேன்’ - அஜித் விக்னேஷ் பெருமிதம்

‘விவேக் மூலம் நடிகரானேன்’ - அஜித் விக்னேஷ் பெருமிதம்
Updated on: 
1 min read

சமீபத்​தில் வெளியான ‘பிளாக் கோல்டு’ படத்​தில் வில்​லனாக நடித்​தவர் அஜித் விக்​னேஷ். இவர் ஏற்​கெனவே, விஜய்​யின் ‘பிகில்’, இணைய தொடரான ‘தமிழ் ராக்​கர்ஸ்’ உள்​பட சில படங்​களில் நடித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “கல்​லூரிப் பரு​வத்​தில் இருந்தே சினிமா ஆர்​வம் இருந்​தது. அதற்​காக மதுரையில் இருந்து சென்​னைக்கு வந்​தேன். ஆரம்​பத்​தில் சிறிய வாய்ப்​பு​கள் கிடைத்​தா​லும் மகிழ்ச்​சி​யுடன் ஏற்​றுக்​கொண்டு, ஒவ்​வொரு வாய்ப்​பிலும் சிறப்​பாகச் செயல்​பட வேண்​டும் என்று நினைத்​தேன். குறும்​படங்​களில் நடிக்​கத் தொடங்​கினேன். பிறகு மறைந்த நடிகர் விவேக் மூலமாக ‘பிகில்’ படத்​தில் நடிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது.

எனது நடிப்​பைப் பார்த்​துப் பாராட்டி அந்த வாய்ப்​பைப் பெற்​றுக் கொடுத்​தார். அந்​தப் படத்​தில் எனது நடிப்பை வெற்​றிமாறன் சார் பாராட்​டியதும் மிகப்​பெரிய ஊக்​கத்​தைக் கொடுத்​தது. தற்​போது கதாநாயக​னாக 2 திரைப்​படங்​களில் நடிக்க ஒப்​பந்​த​மாகி​யுள்​ளேன். அந்​தப் படங்​கள் குறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்​பு​கள் விரைவில் வெளியாகும்” என்​றார்.

‘விவேக் மூலம் நடிகரானேன்’ - அஜித் விக்னேஷ் பெருமிதம்
“நாங்கள் தந்தையும் மகளும் போல...” - மிஷ்கின் குறித்து கீர்த்தி சுரேஷ் விவரிப்பு

X