80-களின் பின்​னணி​யில் ஆக்‌ஷன், காமெடி​யுடன் ‘பத்தா’

80-களின் பின்​னணி​யில் ஆக்‌ஷன், காமெடி​யுடன் ‘பத்தா’
Updated on: 
1 min read

விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்​துள்ள திரைப்​படம், ‘பத்தா’. மேலும் ஹரி​கிருஷ்ணன், சாந்தி பாலச்​சந்​திரன், அர்​ஜுன் சிதம்​பரம், அஜய் கோஷ், தீபா வெங்​கட் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

இதை ‘நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம்’, ‘சீதக்​கா​தி’ படங்களை இயக்​கிய பாலாஜி தரணிதரன் இயக்​கி​யுள்​ளார். சாய் அபயங்​கர் இசையமைத்​துள்ள இப்​படம் அக். 1-ல் வெளி​யாகிறது.

இதன் டிரெய்​லர் வெளி​யாகி​யுள்​ளது. ஆக் ஷன், காமெடி, குடும்ப உணர்வு மற்​றும் மர்​மம் என பல்​வேறு அம்​சங்​களை ஒன்றிணைத்து வெளி​யாகி​யுள்ள இந்த டிரெய்​லர் வரவேற்​பைப் பெற்​று​வரு​கிறது. “1980-களின் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்படத்​தில், அந்​தக் கால கட்​டத்தை உணர்த்​தும் வகை​யில் கதாபாத்​திரங்​களின் தோற்​றம், உடைகள், காட்​சி​யமைப்பு மற்றும் சூழல் என அனைத்​தும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

பத்தா யார்? அவரது பல்​வேறு முகங்​களுக்​குப் பின்​னால் இருக்​கும் விஷயம் என்ன? ரவுடி பத்தா எப்​படி குடும்​பஸ்​த​னாக மாறுகிறார்? அவர் ஏன் சிறை​யில் இருக்​கிறார்? ” என்பதுதான் கதை என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

80-களின் பின்​னணி​யில் ஆக்‌ஷன், காமெடி​யுடன் ‘பத்தா’
The Paradise: விமர்சனம் - அதீத வன்முறையில் தொலைந்த திரைக்கதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in