

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் சிலம்பரசன் டிஆர், பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெற்றிமாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் உருவாகும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலம்பரசன் டிஆர், “அரசன் படத்தில் அனிருத்துடன் இணைந்து பணியாற்றுகிறேன். இது நீங்கள் நினைப்பது போல சிறிய படம் கிடையாது. என் கதாபாத்திரத்தின் இளம் வயது முதல் முதுமை வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இப்படம் பதிவு செய்யும்.
இதற்காக பல்வேறு வயது தோற்றங்களில், பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும். இது பொங்கலுக்கு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். பொங்கல் வெளியீடாக வரவில்லை. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய விரும்பவில்லை. ‘அரசன்’ திரைப்படம் குறித்த ‘த வேர்ல்ட் ஆஃப் அரசன்’ என்ற பிரத்யேக க்ளிம்ப்ஸ், தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது” என்றார்.