

பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘மூன் வாக்’. யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சதீஷ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு தேவாவுடன் ரஹ்மான் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார். ஒரு படத்தின் மொத்த பாடல்களையும் அவரே பாடிஇருப்பது இதுதான் முதன்முறை.
இதுபற்றி படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் கூறும்போது, “இசையில் ஏ.ஆர். ரஹ்மான், நடனத்தில் பிரபுதேவா இருவரும் இந்தியாவின் சிறந்த திறமைசாலிகள். சிறு வயதில் நான் ரசித்த ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் அனுபவத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர நினைத்தேன். இந்த தலைமுறை ரசிகர்களுக்குத் அந்த அனுபவத்தை மீண்டும் தர வேண்டும் என்ற முயற்சிதான், இந்தப்படம்.
இதில் இசைக்கும் நடனத்துக்கும் குறைவே இருக்காது. 3 வருடங்களாக உருவாக்கிய இந்த திரைப்படம் 2026 கோடையில் வெளியாகவுள்ளது. இது முழுமையான காமெடி படம்.
இதில் ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் நட்பு, உழைப்பு, சந்தோஷம் மற்றும் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் இருக்கும்” என்றார்.