மறக்க முடியாத கனவு: நடிகை பூர்ணா நெகிழ்ச்சி

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

Updated on
1 min read

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மெகா வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் அடுத்த பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது. ‘ஜெயிலர் 2’ படத்தில் இடம்பெறும் ‘அல போலலோ’ என்ற பாடலுக்கு நடிகை பூர்ணா நடனம் ஆடியுள்ளார். மலையாள நடிகையான அவர், தமிழில், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், கொடிவீரன், சவரகத்தி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

‘அல போலலோ’ பாடலில் பங்கேற்றது குறித்து பேசியுள்ள நடிகை பூர்ணா, “’ஜெயிலர் 2’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் உண்மையாகவே மகிழ்ச்சியிலும் நன்றியுணர்விலும் திளைக்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத், ஜானி மாஸ்டர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. மறக்க முடியாத கனவை நிஜமாக்கிய இறைவனுக்கு நன்றி. பெருமையாகவும் நன்றியுணர்வுடனும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p><em>நடிகை பூர்ணா</em></p></div>
All We Imagine As Light: இளைப்பாறுதல் தேடும் மனிதிகள் பார்வதி, பிரபா, அனு | திரை தேவதைகள் 32

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in