‘டேர் டெவில்’ படப்​பி​டிப்​பில் நவ.12-ல் பங்கேற்கிறார் அஜித்

‘டேர் டெவில்’ படப்​பி​டிப்​பில் நவ.12-ல் பங்கேற்கிறார் அஜித்
Updated on: 
1 min read

நடிகர் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி ‘படத்​துக்​குப் பிறகு கார் பந்தயத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறார். இதற்​கிடையே அவர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்​கத்​தில் மீண்​டும் நடிக்க இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளியாயின. அதை சில மாதங்​களுக்கு முன் படக்​குழு​வினர் உறுதி செய்​தனர். படத்​தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என்று அறி​விக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் தொடக்​க​விழா சென்​னை​யில் நடைபெற்​றது. படத்தை பிரேவ்​ஹார்ட்ஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரிக்​கும் ஷாலினி அஜித்குமார், கிளாப் அடித்து முதல் காட்​சியை தொடங்கி வைத்​தார். இப்​படத்​தின் நாயகி​யாக நடிக்கும் ஸ்ரீலீலா, இசை அமைப்​பாளர் அனிருத், நடிகர்​கள் ரா.பார்த்​திபன், உன்னி முகுந்​தன், பிரபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் உள்​பட பலர் கலந்​து​கொண்​டனர். அஜித் குமார் நவ.12-ம் தேதி படப்​பி​டிப்​பில் கலந்​து​கொள்​கிறார். இதன் படப்​பி​டிப்பு ஹைதராபாத், மலேசியா, பாங்​காங்​கில் நடை​பெற இருக்​கிறது.

‘டேர் டெவில்’ படப்​பி​டிப்​பில் நவ.12-ல் பங்கேற்கிறார் அஜித்
“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” - கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

X