அஜித்தின் ஸ்போர்ட்ஸ் ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு

அஜித்தின் ஸ்போர்ட்ஸ் ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமாரின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.   

இந்த ஆவணப்படத்தை ‘தெய்வத்திருமகள்’, ‘மதராசப்பட்டிணம்’ படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார். இதனை அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி ‘கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்‌ஷன்’ கீழ் தயாரிக்கிறார். இந்த ஆவணப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இதில் வீடியோகிராபர் நியோல் கெம்மன், ஒளிப்பதிவாளர்கள் ரிப்ஹு சர்மா, கபிலன் விநாயக், படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரும் பணியாற்ற உள்ளனர்.

‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் குமார் மீண்டும் இணையும் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படத்தின் அறிவிப்பும் வெளியானது. 

அஜித்தின் ஸ்போர்ட்ஸ் ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு
அஜித் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in