அஜித்தின் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவ.2-ல் தொடக்கம்

அஜித்தின் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவ.2-ல் தொடக்கம்
Updated on
1 min read

அஜித்குமார் அடுத்து நடிக்க இருக்கும் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீண்ட நாட்களாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்த அஜித்குமார், அடுத்ததாக ‘குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ‘ஏகே 64’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பர் 2-ம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேவ்ஹார்ட் பேனரின் கீழ் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜமும், படத்தொகுப்பை விஜய் வேலுகுட்டியும் மேற்கொள்கின்றனர்.

கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்த அஜித், சமீபத்தில் லண்டனில் நடந்த லீ மேன்ஸ் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அஜித்தின் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவ.2-ல் தொடக்கம்
ஹாலிவுட்​டில் ரீமேக் ஆகிறது ‘மகாராஜா’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in