

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ படத்தில், சிறு வயது விஜய் சேதுபதியாகவும் த்ரிஷாவாகவும் நடித்தவர்கள், ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷண் ஜோடி.
இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சரஸ்வதி மேனன், கே.பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். இதை ஆர்ஜின் ஸ்டூடியோஸ் சார்பில் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி கூறும்போது, “உண்மைச் சம்ப வத்தைத் தழுவி தற்போதைய ‘ஜென் ஸி’தலைமுறையினர் ரசிக்கும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் ‘96’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கவுரி கிஷன் ஜோடி, திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்" என்றார்.