‘பாக்​கெட் நாவல்’ படம்: மாளவிகா மோக​னன் உற்சாகம்

‘பாக்​கெட் நாவல்’ படம்: மாளவிகா மோக​னன் உற்சாகம்
Updated on
1 min read

தமிழ், தெலுங்​கு, இந்​தி​யில் நடித்து வரும் மாளவிகா மோக​னன் இப்​போது ‘பாக்​கெட் நாவல்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதை தியாக​ராஜன் குமார​ராஜா இயக்​கு​கிறார்.

விஜய் சேதுபதி நாயக​னாக நடிக்​கிறார். கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். இளையராஜா இசையமைக்​கும் இப்​படத்​துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்​கிறார்.

இப்​படம் பற்றி மாளவிகா மோக​னன் கூறும்​போது, “பாக்​கெட் நாவல் படப்​பிடிப்பு மிகச் சிறப்​பாக நடந்து வரு​கிறது. இந்​தக் கதையை நாங்​கள் மிக​வும் மகிழ்ச்​சி​யாக உரு​வாக்கி வருகிறோம்.

உண்​மை​யிலேயே ஒரு சிறந்த படக்​குழு​வுடன் பணியாற்று​வது பெருமையாக இருக்​கிறது. இந்​தப் படத்தை மிகவும் உற்​சாக​மாக எதிர்​பார்க்​கிறேன் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது” என்​றார்.

‘பாக்​கெட் நாவல்’ படம்: மாளவிகா மோக​னன் உற்சாகம்
Bulbbul: கொலையும் செய்வாள் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in