“ரசிகர்​களை சிரிக்க வைக்கும் ஆசை நிறைவேறி இருக்கிறது” - நடிகர் வினோத் கிஷண் மகிழ்ச்சி

நடிகர் வினோத் கிஷண்

நடிகர் வினோத் கிஷண்

Updated on
1 min read

அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில், சந்​தோஷ், சம்​யுக்தா விஸ்​வ நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ் என பலர் நடித்​துள்ள ரொமான்​டிக் காமெடி ஃபேன்​டஸி திரைப்​படம் ‘டபுள் ஆக்​குபன்​சி’. பகலில் பெண்​ணாக​வும் இரவில் ஆணாக​வும் மாறும் ஒரு​வரின் கதை​தான் படம். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா நிறு​வனங்​கள் இணைந்து தயாரித்துள்ளன. சாம் சி.எஸ் இசை அமைத்​துள்ள இப்​படம் கடந்த வெள்​ளியன்று வெளி​யானது.

திரையரங்​கங்​களுக்​குச் சென்​று​வந்த படக்​குழு​வினர் செய்தியாளர்​களிடம் பேசினர். நடிகர் வினோத் கிஷண் கூறும்போது,"நான் இதற்கு முன் பல கதா​பாத்​திரங்​களில் நடித்திருக்​கிறேன். நெகட்​டிவ் கதா ​பாத்​திரத்​தி​லும் நடித்துள்ளேன். ஆனால், இந்​தப் படத்​தின் கதா​பாத்​திரம் எனக்கு வித்​தி​யாச​மான ஒன்​று. எனக்கு ரசிகர்​களைச் சிரிக்க வைக்க வேண்​டும் என்ற ஆசை அதி​கம் உண்​டு.

அது கடின​மான ஒன்று என்​பதும் தெரி​யும். அது இந்​தப் படத்​தில் நிறைவேறி​யிருக்​கிறது. அதற்​காக இயக்​குநர் அஸ்​வினுக்கு நன்​றி. அவர் ஒரு ஐடி​யா​வுடன் வந்​தார். இதை எப்​படிப் பண்​ணப் போகிறோம் என்று யோசித்​துக் கொண்டே ஜாலி​யாக நடித்​தோம். இது பார்​வை​யாளர்​களுக்​குப் பிடித்​திருக்​கிறது என்​ப​தில் மகிழ்ச்சி” என்​றார்.

<div class="paragraphs"><p><em>நடிகர் வினோத் கிஷண்</em></p></div>
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in