

தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தைத் தயாரிக்கிறார். விக்ரம் பிரபுவின் 26-வது படமான இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கார்த்திக் ஷராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘ஆக் ஷன் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும்” என்றது படக்குழு.