

நடிகர் விக்ரம்
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா, எனிமி ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. அவருடைய 63-வது படமான இதை, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாக ராஜன் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, விடிவி கணேஷ், சுபாஷ் செல்வம், விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘‘ஃபேமிலி த்ரில்லர் ஆக் ஷன் திரைப்படமாக உருவாக இருக்கும் இதில் மாஸ் அம்சங்களுடன் காட்சிகள் இருக்கும். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது’’ என படக்குழு தெரிவித்துள்ளது.