

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’, ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இதில் மமிதா பைஜு உள்பட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சூர்யாவின் 47-வது படத்தை ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்குகிறார். இதில் நஸ்ரியா , பிரேமலு மூலம் பிரபலமான நஸ்லென், ஆனந்த்ராஜ், ஜான் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார்.
ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. ஜீத்து மாதவன், நஸ்ரியா, நஸ்லென், நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி, ராஜசேகர பாண்டியன், எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பூஜை முடிந்ததும், முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.