விஜய்யின் வீடியோ மீதான விமர்சனங்கள் - நடிகர் ஸ்ரீமன் ஆவேச எதிர்வினை

விஜய்யின் வீடியோ மீதான விமர்சனங்கள் - நடிகர் ஸ்ரீமன் ஆவேச எதிர்வினை
Updated on
1 min read

தவெக தலைவர் விஜய்யின் வீடியோ பதிவு ஒன்று கடும் விமர்சனங்களுக்கு ஆளானது தொடர்பாக நடிகர் ஸ்ரீமன் ஆவேசமாக எதிர்வினையாற்றி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிய இறுதிகட்ட பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் சர்ச் ஒன்றில் அவர் பிரார்த்தனை வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் மண்டியிட்டபடியே நடந்து சென்று விஜய் பிரார்த்தனை செய்தது போன்று அந்த வீடியோ பதிவு அமைந்திருந்தது.

இந்த வீடியோ பதிவை முன்வைத்து பல்வேறு இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீமன் தனது எக்ஸ் தளத்தில், “எனக்கு தெரிந்தவரை கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தப் பிரார்த்தனையைத் தொடர்ந்து செய்து வருகிறார் விஜய்.

ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போது, அது வெற்றிபெற வேண்டி இவர் சென்று இந்தப் பிரார்த்தனையை மேற்கொள்வது வழக்கம்.

ஒரு படத்தின் வெற்றி என்பது அதில் ஈடுபட்டிருக்கும் 24 கலைத் துறையினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆகிய அனைவரின் வெற்றியுமாகும்.

அதேபோன்று இம்முறை மாநிலத்தின் நலனுக்காகவும், நம் மக்களின் நன்மைக்காகவும் இவர் இந்தப் பிரார்த்தனையைச் செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீமன்.

விஜய்யின் வீடியோ மீதான விமர்சனங்கள் - நடிகர் ஸ்ரீமன் ஆவேச எதிர்வினை
நான் ‘சாதி - மதமற்றவர்’ சான்றிதழ் பெற முனைந்தது ஏன்? - நடிகர் பார்த்திபன் விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in