சிலம்பரசனின் ‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

சிலம்பரசனின் ‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?
Updated on
1 min read

வெற்றி மாறன் இயக்​கத்​தில் தனுஷ் நடித்து வரவேற்​பைப் பெற்ற திரைப்​படம் ‘வடசென்​னை’. இந்​தப் படத்​துடன் தொடர்​புடைய கதை​யாக ‘அரசன்’ படம் உரு​வாகிறது.

இதில், சிலம்​பரசன் நாயக​னாக நடிக்​கிறார். விஜய் சேதுபதி முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். சமுத்​திரக்​க​னி, கிஷோர், ஆண்ட்​ரியா உள்ளிட்​டோர் நடிக்​கின்​றனர். அனிருத் இசையமைக்​கிறார்.

கலைப்​புலி எஸ்​.​தாணு தயாரிக்​கும் இந்​தப் படத்​தின் புரமோ வீடியோ வெளி​யாகி ரசிகர்​களின் கவனத்தை ஈர்த்​தது.

இதன் படப்​பிடிப்பு எப்​போது என்று பல்​வேறு தகவல்​கள் வெளி​யாகி வந்தன. இந்​நிலை​யில் இதன் ஷூட்​டிங் பற்றி சிலம்​பரசன் தகவல் தெரி​வித்​து உள்​ளார்.

மலேசி​யா​வில் நகைக்​கடை திறப்​பு​விழாவுக்​காகச் சென்​றுள்ள நடிகர் சிலம்​பரசன் அங்கு பேசும்​போது, டிச.9-ம் தேதி மதுரை​யில் ‘அரசன்’ படப்​பிடிப்பு தொடங்கு கிறது. இங்​கிருந்து நேரடி​யாக அங்கு​தான் செல்ல இருக்​கிறேன். உங்​கள் அன்​பும் ஆதர​வும் தேவை என்று தெரி​வித்​துள்​ளார்​.

சிலம்பரசனின் ‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?
The Great Dictator – சர்வாதிகாரியை எதிர்த்த சாப்ளின் | சினிமாவும் அரசியலும் 8

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in