

நடிகர் பிரபு தேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ’ என்ற இசை ஆல்பம் மூலம், அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ள இப்பாடலை, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவாவுடன் நடிகை கைரா இணைந்து நடனமாடியுள்ளார்.
இந்தப் பாடலில் காதல், அப்பாவித்தனம், மறக்க இயலாத தருணங்கள் ஆகியவை பாடல் வரிகளுடன் இணைந்துள்ளன. இந்த ஆல்பத்தை ட்ரஸ்டினா ஐசக் இயக்கியுள்ளார். ஆர்.பி.குரு தேவ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் நடனம் அமைத்திருக்கிறார். சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பாடல் யூடியூப்பில் வேகமாகப் பரவி வருகிறது.