“இயக்​குநரோட நடிகனா இருக்கணும்!” - முனீஷ்காந்த் நேர்காணல்

“இயக்​குநரோட நடிகனா இருக்கணும்!” - முனீஷ்காந்த் நேர்காணல்
Updated on
2 min read

‘முண்டாசுப்பட்டி’​யில் நடிக​ராக அறி​முக​மான முனீஷ்காந்த், இப்​போது முக்​கிய​மான குணச்​சித்​திர நடிகர். சமீபத்​தில் வெளி​யாகி இருக்​கிற ‘தாய் கிழவி’​யில் அவர் கதா​பாத்​திரம் பேசப்​பட்​டிருக்​கிறது. சினி​மா​வில் 12 ஆண்டு​களைக் கடந்​திருக்​கும் அவரிடம் பேசி​ய​தில் இருந்து...

Q

‘தாய் கிழ​வி’ல உங்க நடிப்பு பாராட்​டப்​பட்டு வருது...

A

‘முண்​டாசுப்​பட்​டி’ மாதிரி, ‘தாய் கிழ​வி’ படமும் என் கேரியர்ல முக்​கிய​மான படம். இதுல நடிச்சு முடிச்​சுட்டு டப்​பிங் பேசும்​போது​தான், உடல் மொழி மட்டுமல்ல, டப்​பிங்​கும் ஒரு நடிப்​புத்​தான்னு புரிஞ்​சுகிட்​டேன். இந்​தப் படத்​துல நான் பேசிய வசனங்​கள் ரசிக்​கப்​படறதுக்கு டப்​பிங்​கும் முக்​கிய காரணம்.

அந்​தப் படத்து இயக்​குநர் சிவக்​கு​மார் முரு​கேசன் சொல்​லிக் கொடுத்த விதமே எனக்​குப் பிடிச்​சிருந்​தது. என் கேரக்​டர் பேசப்​படறதுக்கு அவர்​தான் காரணம். தமிழ் சினி​மா​வின் முக்​கிய​மான இயக்​குநர்​கள்ல ஒருத்​தரா அவர் இருப்​பார். படப்​பிடிப்​பிலேயே அவரோட நடவடிக்​கைகளைப் பார்த்து நான் உள்பட எல்​லோருமே அவரை​யும் அந்​தப் படத்​தை​யும் நம்​பினோம். அது மாதிரியே இன்​னைக்கு அந்​தப் படம் வரவேற்​பைப் பெற்​றிருக்​கு.

Q

ராதிகா சரத்​கு​மார் சீனியர் நடிகை. அவங்க கூட நடிச்ச அனுபவம் எப்​படி​யிருந்தது?

A

‘தாய் கிழ​வி’யை பொறுத்​தவரை அவங்​க​தான் கதா​நாயகி. ஷூட்​டிங் ஸ்பாட்ல ரொம்ப அமை​தியா இருந்​தாங்க. என்​னன்​னா, மனசுக்​குள்​ளயே ரிகர்​சல் பார்த்​துட்டு இருந்​தாங்க. இந்​தப் படத்​துல அவங்க மேக்​கப் கஷ்ட​மானது. அவங்க கூட நடிச்​சது பெரிய அனுபவம். நிறைய கத்துக்க முடிஞ்​சுது.

Q

ஆரம்​பத்​துல காமெடி ரோல் பண்​ணிட்​டிருந்​தீங்க. திடீர்னு குணச்​சித்​திரத்​துக்கு மாறிட்​டீங்​களே...

A

ஆமா. நான் வில்​லனா நடிக்​கத்​தான் சினி​மாவுக்கு வந்​தேன். ‘முண்​டாசுப்​பட்​டி’ இயக்​குநர் அந்​தப் படத்​துல ‘நீங்​க​தான் இந்த காமெடி கேரக்​டரை பண்​றீங்​க’ன்னு சொல்​லும்​போதே, ‘சார் வேண்​டாம், என்​னைய பார்த்து யார் சிரிப்​பாங்​க?னு​தான் சொன்​னேன். ‘இல்​லை, இது உங்​களுக்கு சரியா வரும்​’னு சொன்​னார்.

அவர் சொன்​னபடி பண்​ணினேன். காமெடி ஒர்க் அவுட் ஆகிருச்​சு. அப்​ப​தான் புரிஞ்​சுகிட்​டேன், ‘ஒரு டைரக்​டர் நினைச்​சா, யாரை​யும் எந்த கேரக்​டருக்​குள்​ள​யும் பொருத்​திட முடி​யும்​’னு. அப்​பவே ஒரு இயக்​குநரோட நடிகரா இருக்​கறது​தான் சிறந்​ததுன்னு முடிவு பண்​ணினேன்.

தொடர்ந்து அப்​படித்​தான் பண்​ணிட்டு வர்​றேன். ‘இந்த கேரக்​டர் உங்​களுக்கு சரியா வரும்​’னு ஒரு டைரக்​டர் சொன்​னா, அவரை நம்பி நடிக்​கிறேன். ‘தாய் கிழ​வி’ வரை அப்​படித்​தான். தொடர்ந்து அப்​படித்​தான் இருப்​பேன்.

Q

வில்​லனா நடிக்​கிற ஆசை என்​னாச்​சு?

A

பிர​சாந்த் பாண்​டி​யராஜ் இயக்​கிய ‘புரூஸ் லீ’ படத்​துல காமெடி வில்​லனா நடிச்சேன். அப்​பவே இயக்​குநர்​ கிட்ட ‘இது எனக்கு சரிபட்டு வரு​மா?’ன்னு கேட்​டேன். அவர் அந்த கேரக்​டர்ல முனீஷ்​காந்​து​தான் தெரி​வார்னு சொல்லி நடிக்க வச்​சார். அந்​தப் படத்​துக்​குப் பிறகு நான் எதிர்​பார்த்த வில்​லன் வேடம் கிடைக்​கலை. இப்ப ‘தாய் கிழ​வி’ இயக் குநர்​கிட்ட ‘வில்​லனா நடிக்க ஆசை​யிருக்​கு. உங்க படத்துல வாய்ப்​பிருந்தா கொடுங்க’ன்னு கேட்​டேன். ‘அதுக்​கான தகுதி உங்​ககிட்ட இருக்​கு’ன்னு சொன்​னார். பார்ப்​போம்.

Q

கதை​யின் நாயகனா ஒரு படத்​துல நடிச்​சீங்​களே?

A

நீங்க ‘மிடில் கிளாஸ்’ படத்தை மனசுல வச்​சுட்டு கேட்​கிறீங்​கன்னு நினைக்கிறேன். அதுல நான் கதை​யின் நாயகன் இல்​லை. அதுல விஜயலட்​சுமி​தான் மெயின் கதா​பாத்​திரம். எனக்கு கதையை நகர்த்​துற கேரக்​டர்​தான். அப்​படி ஒரு கதா​பாத்​திரத்​துல நடிக்​கணும்னு என் மேல நம்​பிக்கை வச்சு இயக்​குநர்​கள் கேட்​கும்​போது அதை பண்​ணித்​தான் ஆகணும். அப்​படித்​தான் அந்​தப் படத்​துல நடிச்​சேன். அது போல கதா​பாத்​திரங்​கள் கிடைச்சா நடிப்​பேன்.

Q

சினி​மாவுக்கு வந்து 12 வருஷம் ஆச்​சு. நீங்க நினைச்​சது நிறைவேறியிருக்​கா?

A

‘முண்​டாசுப்​பட்​டி’ படம் ரிலீஸ் ஆகி முதல் காட்சி முடிஞ்​சதும் பதற்​றத்​தோட ஏவிஎம் ராஜேஸ்​வரி தியேட்​டர் வாசல் முன்​னால நான் நின்​னது இப்​ப​வும் ஞாபகம் இருக்​கு. அந்​தப் படம் முடிஞ்சு வந்த ரசிகர்​கள், என்​னைப் பார்த்​ததும் கைகொடுத்தாங்க.

நல்லா நடிச்​சிருக்​கீங்​கன்னு சொன்​னாங்க. நான் அடைஞ்ச மகிழ்ச்​சிக்கு அளவே இல்​லை. அந்த நேரத்​துல, ‘இந்த இடத்தை காப்​பாற்​றினா போதும்​’னு முடிவு பண்​ணினேன். அதுக்கு மேல பேராசைப் படக் கூடாதுன்​னும் நினைச்​சேன். அப்​படி​த்தான் இப்ப வரை போய்கிட்டிருக்கேன்.

Q

சினி​மாவுல அடுத்​தக் கட்​டமா என்ன திட்​டம் இருக்​கு?

A

எந்த ஆசை​யும் இல்​லை. எந்த திட்​ட​மும் இல்​லை. நடிப்​பு​தான். இதுல தொடர்ந்து போய் கொண்டே இருக்​கணும்​. எனக்​கு அந்​த அறி​வு​தான்​ இருக்​கு. சில வருடங்​கள்​ கழிச்​சு படம்​ த​யாரிக்​கிற எண்ணம் இருக்கு.

- செ.ஏக்நாத்ராஜ் |தொடர்புக்கு egnathraj.c@hindutamil.co.in

“இயக்​குநரோட நடிகனா இருக்கணும்!” - முனீஷ்காந்த் நேர்காணல்
28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in