நடிகர் அஸ்​வினின் ‘குட் நியூஸ்’ படம்

நடிகர் அஸ்​வின் அருகில் நடிகை கல்யாணி அனில்

நடிகர் அஸ்​வின் அருகில் நடிகை கல்யாணி அனில்

Updated on
1 min read

இயக்​குநர் பாண்​டி​ராஜிடம் உதவி இயக்​குந​ராகப் பணிபுரிந்த நாகேந்திர முரு​கன் இயக்குநராக அறி​முக​மாகும் படம், ‘குட் நியூஸ்’. இதில் அஸ்​வின் கதா​நாயக​னாக நடிக்​கிறார். அவர் ஜோடியாக கல்​யாணி அனில் அறி​முக​மாகிறார்.

ஜெய​ராம், ஆஷா சரத், முத்​துக்​கு​மார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோ​தினி உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​ பாத்​திரங்​களில் நடிக்கின்​றனர். மூவிட்​ரான் புரொடக் ஷன் சார்​பில் சாய் வினோத் ஜெயக்​ கு​மார் தயாரிக்​கும் இப்​படத்தை சாய்​பிரபு ஜெயக்​கு​மார் இணை தயாரிப்பு செய்​கிறார். சித்​துகு​மார் இசையமைக்​கிறார்.

பிர​வீண் ​கு​மார் ஒளிப்​ப​திவு செய்​கிறார். இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர் விஜய் கிளாப் அடித்​தும் இயக்​குநர் பாலா கேம​ராவை ஆன் செய்​தும் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்​தனர். ஆர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்​டார்.

“இப்​படம் அனைத்து வயதினரும் ரசிக்​கும் வகை​யில் நகைச்சுவை, பாசம் மற்​றும் நெஞ்சை நெகிழ வைக்​கும் தருணங்கள் நிறைந்த முழு​மை​யான குடும்​பத் திரைப்​பட​மாக உரு​வாகிறது” எனப் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p><em>நடிகர் அஸ்​வின் அருகில் நடிகை கல்யாணி அனில்</em></p></div>
‘பாலன்’ படம் எப்படி? - வீடியோ விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in