அஜித் குமாரின் ‘அமர்க்​களம்’ ஏப்​.24-ல் ரீரிலீஸ்

அஜித் குமாரின் ‘அமர்க்​களம்’ ஏப்​.24-ல் ரீரிலீஸ்
Updated on
1 min read

சரண் இயக்​கத்​தில் அஜித்​கு​மார் நடித்து 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்​படம் ‘அமர்க்​களம்’. அஜித் குமாரின் 25-வது படமான இதில் ஷாலினி நாயகி​யாக நடித்​தார். இதில்​தான் இரு​வரும் முதன்​முறை​யாக இணைந்து நடித்​தனர். அப்​போது காதல் வயப்​பட்டு திரு​மணம் செய்​து​கொண்​டனர். இப்படத்​தில் ரகு​வரன், நாசர், வினு சக்​கர​வர்த்தி உள்பட பலர் நடித்​தனர்.

ஏ.வெங்​கடேஷ் ஒளிப்​ப​திவு செய்த இப்​படத்​துக்கு பரத்​வாஜ் இசை அமைத்​தார். அவர் இசை​யில், ‘உன்​னோடு வாழாத வாழ்​வென்ன வாழ்​வு...’, ‘சத்​தம் இல்​லாத தனிமை கேட்​டேன்’ உள்பட பாடல்​கள் சூப்​பர் ஹிட்​டா​யின. இப்​போதும் இந்த படத்​தின் பாடல்​கள் வரவேற்​பைப் பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் இப்​படம் டிஜிட்டலில் நவீனப்​ படுத்​தப்​பட்டு ஏப்​.24-ல் மீண்​டும் வெளியாகிறது.

அஜித்- ஷாலினி ஜோடி​யின் திருமண நாளை முன்​னிட்​டு இந்தப்படம்​ மீண்​டும்​ வெளி​யா​வ​தால்​ ரசிகர்​கள்​ உற்சாகமடைந்துள்​ளனர்​. ஸ்​பேரோ சினி​மாஸ்​ நிறு​வனத்​தின்​ ​கார்​த்​திக்​ வெங்​கடேசன்​ இப்​ படத்​தை தமிழ்​​நாடு ​முழுவதும்​ வெளியிடுகிறார்​.

அஜித் குமாரின் ‘அமர்க்​களம்’ ஏப்​.24-ல் ரீரிலீஸ்
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in