

தமிழ் நாட்டை அதிரவைத்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள திரைப்படம், ‘கள வேட்டை’. இம்மானுவேல் அரசர் ஃபிலிம்ஸ் சார்பில், டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலை அரசர் தயாரித்துள்ள இப்படத்தில் அவர், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த நடிகை நைகா ஷானு நாயகியாக நடித்து நடித்திருக்கிறார். இவர்களுடன் இளவரசு, சிங்கம்புலி, சாம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஃபிலிப் ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார்.
தன்ஷிகா நடிப்பில் வெளியான ‘யோகிடா’ படத்தை இயக்கிய கவுதம் கிருஷ்ணா, இந்த படத்தை இயக்கியுள்ளார். “இப்படம் குற்றப் புலனாய்வுக் கதையாக மட்டுமல்லாமல், சமூகத்தில் நடந்த சம்பவம் ஒன்றின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் படைப்பாக உருவாகியுள்ளது.
அதிர்ச்சி, பரபரப்பு, மர்மம் மற்றும் உண்மையின் தேடலை மையமாகக் கொண்ட படம் என்பதால் பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவத்தை இப்படம் கொடுக்கும். கன்னியாகுமரி, பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது” என்றது படக்குழு.