“நம்மிடமும் குறைகள் உள்ளன” - 'என்.ஜி.கே' வெளியான நாளில் செல்வராகவன் ட்வீட்

“நம்மிடமும் குறைகள் உள்ளன” - 'என்.ஜி.கே' வெளியான நாளில் செல்வராகவன் ட்வீட்
Updated on
1 min read

சென்னை: 'என்.ஜி.கே' படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'என்.ஜி.கே'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் கடந்த 2019ஆம் ஆண்டு மே 31ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இப்படம் வசூல் ரீதியில் தோல்வியைத் தழுவியது.

இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #4YearsOfNGK என்ற ஹேஷ்டேகுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் ‘என்.ஜி.கே' படம் வெளியான நாளான நேற்று (மே 31) இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நேர்த்தி என்ற ஒரு விஷயம் எங்கும் கிடையாது. நம்மிடமும் குறைகள் உள்ளன. அதில் பிரச்சினையில்லை. ஒரு வைரத்தைப் போல” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வராகவன் இந்த ட்வீட்டில் நேரடியாக எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் ‘என்.ஜி.கே' படம் குறித்துதான் மறைமுகமாக இவ்வாறு ட்வீட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in