

தனுஷ், அமலா பால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வேலையில்லா பட்டதாரி' ஜூலை 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார். தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் தியேட்டர் உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
நடிகர் தனுஷின் 25-வது படமாக வெளிவரவுள்ள 'வேலையில்லா பட்டதாரி'யின் ட்ரெய்லர், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்தது.
இப்படத்தின் திரையரங்க உரிமைகளை வைத்திருக்கும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் மதன், "ஜூலை 18ம் தேதி 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் வெளியாகும். தனுஷின் படங்களிலே மிகப்பெரிய வெளியீடாக இப்படம் இருக்கும்" என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அமலா பால் திருமணத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் 'வேலையில்லா பட்டதாரி' என்பது குறிப்பிடத்தக்கது