

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. சிஎஸ்கேவின் இந்த வெற்றியை பிரபலங்கள் ட்விட்டரில் கொண்டாடினர்.
16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரவீந்திர ஜடேஜா... ஓ மை காட்..” என உற்சாகம் பொங்க பதிவிட்டுள்ளார்.
த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சிஎஸ்கே... எனக்கு பேச வார்த்தைகளேயில்லை..” என பதிவிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேங்க்யூ ஜடேஜா... தல தோனியை எதுவும் வெல்ல முடியாது. சிஎஸ்கே ஃபாரவர்” என பதிவிட்டுள்ளார்.
வரலட்சுமி சரத்குமார், “என்ன மாதிரியான ஒரு ஃபைனல் இது. காத்திருந்ததற்கு தக்க பலன் கிடைத்தது. ஒரே ஆட்டம், அணி, ஒரே நபர் எம்.எஸ்.தோனி. ராக்ஸ்டார் ஜடேஜா.. லவ் யூ சிஎஸ்கே” என பதிவிட்டுள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில், ’சிஎஸ்கே ஃபாரவர்” என பதிவிட்டுள்ளார்.
அனிருத். வெற்றிக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜடேஜாவை தோனி தூக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.