

“தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி” என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். குடியரசுத்தலைவரைக் கொண்டு கட்டிடத்தை திறக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளனர். இதனிடையே பலரும் நாடாளுமன்ற கட்டிட திறப்புக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். #தமிழன்டா. தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.