மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல் பங்கேற்பதாக தகவல்

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல் பங்கேற்பதாக தகவல்
Updated on
1 min read

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான, ‘ராசாகண்ணு’ பாடல் வெளியானது. யுகபாரதி எழுத்தில் வடிவேலு பாடிய இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in