கமல் தயாரிப்பில் சிம்பு: ஆகஸ்டில் படப்பிடிப்பு

சிம்பு, கமல்ஹாசன், தேசிங்கு பெரியசாமி
சிம்பு, கமல்ஹாசன், தேசிங்கு பெரியசாமி
Updated on
1 min read

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சிம்புவின் 48-வது படமான இது வரலாற்றுப் படம் என்று கூறப்படுகிறது. இதை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியவர்.

சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாகவும், சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சிம்பு மற்றும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in