Published : 23 May 2023 06:03 AM
Last Updated : 23 May 2023 06:03 AM
சென்னை: நடிகர் சரத்பாபு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்றசெய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்தகதாபாத்திரங்கள் இன்றும் தமிழ்ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது மறைவால் வாடும்குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் உயிரழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ரஜினிகாந்த்: என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: தென்னிந்தியத் திரையுலகின் அத்தனை மொழிகளிலும், தன் பண்பட்ட நடிப்பால் முத்திரை பதித்த மூத்த நடிகர் சரத்பாபு காலமானதை அறிந்து,மிகுந்த வருத்தம் அடைந்தேன்.அவரது ஆன்மா சாந்தியடையஇறைவனை வேண்டிக்கொள் கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: நடிகர் சரத்பாபு காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
பல்வேறு படங்களில் என்னு டன் சேர்ந்து நடித்துள்ளார். பழகுவதற்கு மிகவும் இனிமை யானவர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: சிறந்த நடிகரான சரத்பாபு, தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என்மனதில் நிழலாடுகின்றன. காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நடிகர் சரத்பாபு காலமான செய்தி வருத்தம் அளிக்கிறது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து, பாராட்டைப் பெற்றவர். அவரது மறைவு திரையுலகுக்கு பேரிழப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT