சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை ‘கூழாங்கல்’ புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் எழுதி இயக்குகிறார். சூரி - அன்னா பென் நடித்துள்ள இப்படத்துக்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ படத்தை தரத்தின் வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக சூரி மற்றும் அன்னா பென்னின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது.

‘விடுதலை’ படத்துக்கு பிறகு சூரி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்டமாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற உள்ள நிலையில், விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அழுத்தமான கதையை கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைட்டில் டீசர் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in