

கமல், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடிப்பில் கடந்த 2006-ல் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இப்போது டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஜூனில் மீண்டும் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கமலின் ‘ஆளவந்தான்’ படம் மீண்டும் எடிட் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருந்தார்.