IIFA 2023 | நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

IIFA 2023 | நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Updated on
1 min read

சென்னை: அபுதாபியில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.

ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) சார்பில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் நடக்கிறது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். இதில் சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபங்கள் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருதை வழங்குவதாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி தெரிவித்துள்ளது. நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோருக்கு பிராந்திய சினிமாவில் மிகச்சிறந்த சாதனை விருதும், ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ராவுக்கு ஃபேஷன் துறையில் மிகச்சிறந்த சாதனை விருதும் வழங்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in