நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக வெளியான தகவல் - முழு பின்னணி

நடிகை சுனைனா
நடிகை சுனைனா
Updated on
1 min read

கடந்த இரு தினங்களாக நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி படம் ஒன்றின் விளம்பரத்துக்காக படக்குழுவினரே செய்தது தெரியவந்துள்ளது.

2008ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பிறகு ‘மாசிலாமணி', ‘வம்சம்', ’சமர்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். ஹலீதா சமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் சுனைனாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான ‘லத்தி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக நடிகை சுனைனாவை காணவில்லை என்றும் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வந்தது. இது தொடர்பான காணொளி ஒன்றையும் பலர் பகிர்ந்து வந்தனர். அதில் அவரை யாரேனும் கடத்தியிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுனைனா தற்போது நடித்து வரும் ‘ரெஜினா’ என்ற படத்தின் விளம்பரத்துக்காக படக்குழுவினரே இப்படி ஒரு வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் என்பது தெரியவந்தது. தற்போது இதற்கான விளக்க வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் விளம்பரத்துக்காக வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் பரபரப்பைக் கிளப்பிய படக்குழு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in