அன்பும் மரியாதையும் உண்டு - ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா பதில்

அன்பும் மரியாதையும் உண்டு - ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா பதில்
Updated on
1 min read

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “தெலுங்கில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் கிடைத்திருந்தால் அவரை விட சிறப்பாக நடித்திருப்பேன்” என்று கூறியதாக சர்ச்சை எழுந்தது.

ராஷ்மிகாவை அவமதித்துவிட்டதாக அவர் ரசிகர்கள் விமர்சித்தனர். இது பரபரப்பானது. இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்திருந்தார். “என் பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை ஒருபோதும் குறை கூறவில்லை. அவர் மீது எனக்கு அபிமானம் உண்டு” என்று விளக்கம் அளித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் விளக்கத்தை டேக் செய்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அதற்கு பதிலளித்துள்ளார். அதில், ‘‘உங்கள் பேட்டியை நன்றாக புரிந்துகொண்டேன். நமக்குள் விளக்கம் அளித்துக்கொள்ள எந்த தேவையுமில்லை என நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உண்டு. உங்கள் ‘ஃபர்ஹானா’வுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in