

பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. அவர், இந்தி வாய்ப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “இந்தியாவின் மிகப்பெரிய சினிமா துறையாக பாலிவுட் இருக்கிறது. ஒரு ரசிகையாக ஷாருக்கான் படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். நான் உட்பட அனைவரும் இந்தி சினிமாவில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம்.
ஆனால், சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். ஓடிடி தொடர்கள், தாக்கத்தை ஏற்படுத்தாத கதாபாத்திரங்களை கொண்ட படங்கள் எனக்கு வருகின்றன. அதில் நடிக்க விருப்பம் இல்லாததால், நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் என் நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது” என்றார்.