பெரியாரின் கனவு நனவானது: கேரள முதல்வருக்கு கமல் நன்றி

பெரியாரின் கனவு நனவானது: கேரள முதல்வருக்கு கமல் நன்றி
Updated on
1 min read

பிராமணர் அல்லாதோர் 36 பேரை அர்ச்சகராக நியமித்த திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க 62 பேரை கேரள தேவஸ்வம் ஆட்சேர்ப்பு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் 26 பேர் முன்னேறிய வகுப்பினர். மீதி உள்ள 36 பேரில் 6 பேர் தலித்துகள். அர்ச்சகர்ளாக நியமிக்க தலித்துகளின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

கேரளாவின் இந்த அறிவிப்பை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிராமணர் அல்லாதவர்கள் 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு எனது வாழ்த்துகள். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எனது வணக்கங்கள். பெரியாரின் கனவு நனவானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in