‘‘கபில்தேவுடன் பணியாற்றுவது பெருமை” - நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

‘‘கபில்தேவுடன் பணியாற்றுவது பெருமை” - நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்
Updated on
1 min read

“முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கபில்தேவுடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். மும்பையில் நடைபெற்ற ‘லால் சலாம்’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ரஜினிகாந்தும், கபில்தேவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவுமாகவும் கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in