“தொடரும் மலக்குழி மரணங்கள்; தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்” - பா.ரஞ்சித்

“தொடரும் மலக்குழி மரணங்கள்; தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்” - பா.ரஞ்சித்
Updated on
1 min read

“தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இக்கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் கடும் கண்டனங்கள்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடரும் மலக்குழி மரணங்கள். தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இக்கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் கடும் கண்டனங்கள். மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சினையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in