2.0 வெளியீடு எப்போது?- படக்குழுவினர் விளக்கம்

2.0 வெளியீடு எப்போது?- படக்குழுவினர் விளக்கம்
Updated on
1 min read

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் '2.0' வெளியீடு எப்போது என்று படக்குழுவினர் விளக்கமளித்தனர்.

ஆர்.பால்கி இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பேட்மேன்' (Padman). இப்படம் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என படத்தின் போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அக்‌ஷய்குமார். இத்தகவலால் '2.0' வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இதனால் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இந்த சர்ச்சைக் குறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது கூறியதாவது:

அக்‌ஷய்குமாரின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தது உண்மைதான். ஆனால், அதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம், ஷங்கர் உள்ளிட்டோர் அக்‌ஷய்குமாரிடம் பேசினர்.

'2.0' ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் பட்சத்தில் 'பேட்மேன்' வெளியாகாது என்று அக்‌ஷய்குமார் உறுதிபடத் தெரிவித்தார்.

எப்போதுமே இந்திப் படங்கள் தங்களுடைய வெளியீட்டு தேதியை முன்பே உறுதிப்படுத்தக்கூடிய சூழல் இருப்பதால் மட்டுமே ஜனவரி 26 'பேட்மேன்' வெளியீடு என்று அறிவித்தேன் எனவும் குறிப்பிட்டார்.

'2.0' பணிகளைப் பொறுத்தவரை, ஜனவரி 25-ம் தேதி வெளியீட்டிற்கான அனைத்து பணிகளையும் இரவு பகலாக பார்த்து வருகிறோம். ஏப்ரல் 13-ம் தேதி வெளியீடு என்பது உண்மையில்லை. ஏனென்றால் அதே தேதியில் 3டி தொழில்நுட்பத்தில் சோனி நிறுவனம் தயாரித்துள்ள படம் உலகம் முழுவதும் வெளிவருகிறது. இரண்டுமே 3டி படம் என்பதால் திரையரங்குகள் போதுமான அளவு கிடைக்காது.

ஜனவரி 25-ம் தேதி எந்த படமும் வெளியாகாததால் அன்றைய தினம் 2.0 படத்திற்கான சரியான தேதியாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in