அசோக் செல்வன், சரத்குமாரின் ‘போர் தொழில்’ பட முதல் தோற்றம் வெளியீடு

அசோக் செல்வன், சரத்குமாரின் ‘போர் தொழில்’ பட முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

அசோக்செல்வன், சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சரத்குமார் ஒருபுறம் துப்பாக்கியுடனும், மறுபுறம் அசோக் செல்வன் புத்தகத்தை வைத்திருக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்படுள்ளது.

அசோக்செல்வன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘போர் தொழில்’. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்லாஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் காவல் நிலையத்துக்கான பேக்ரவுண்டில் ஆவணங்கள் அடுக்கப்பட்டுள்ள மேசையில் ஒருபுறம் சரத்குமார் கையில் துப்பாக்கியுடனும், மறுபுறம் ‘tamilnadu police hand book’ என்ற புத்தகத்தை அசோக் செல்வன் கையில் வைத்துள்ளார். காவல் துறையை மையப்படுத்தி க்ரைம் த்ரில்லர் பாணியில் படம் உருவாகியிருப்பதை முதல் தோற்றம் உணர்த்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in