

கேஆர்எஸ் ஃபிலிம்டாம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா தயாரித்துள்ள படம், ‘பாய்-ஸ்லீப்பர் செல்ஸ்’. கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். ஆதவா ஈஸ்வரா, நிகிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். தீரஜ் கெர் வில்லனாக நடித்துள்ளார். பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
படத்தை இயக்கியுள்ள கமலநாதன் புவன்குமார் கூறும்போது, “அரசியலில் இன்று சக்தி வாய்ந்தகருவியாக மதம் இருக்கிறது. அதை வைத்து கொடூரத்தைச் சிலர் செய்து வருகிறார்கள். அதைப்பற்றி படம் பேசுகிறது. முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்கான பதில்களாகவும் வரும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதன் முதல் தோற்ற போஸ்டரை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்தியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் முகமது அபுபக்கர், அப்போஸ்தல சர்ச்ஆப் இந்தியா பிஷப் எஸ் எம்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ளனர்.