“ராஷ்மிகா மந்தனாவை விட இன்னும் பொருந்தியிருப்பேன்” - ‘புஷ்பா’ குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்

“ராஷ்மிகா மந்தனாவை விட இன்னும் பொருந்தியிருப்பேன்” - ‘புஷ்பா’ குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்
Updated on
1 min read

“புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தார். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், அந்தக் கதாபாத்திரத்தில் நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன்” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘ஃபர்ஹானா’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது. இதனிடையே அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனாவை குறிப்பிட்டு பேசியிருந்தது தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் கம்பேக் கொடுக்க எனக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும்.

நான் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தெலுங்கில் ‘வெர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ (World Famous Lover) படத்தில் நடித்தேன். ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஒருவேளை எனக்கு நல்ல படங்கள் அமைந்தால் நிச்சயம் தெலுங்கில் நடிப்பேன். ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தார். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தில் நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in