

நடிகை சினேகாவும் பிரசன்னாவும் காதலித்து, கடந்த 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் தங்களது 11-வது திருமண நாளை, நேற்று முன்தினம் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக பிரசன்னா, தனது இன்ஸ்டாவில் சினேகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “உன் அன்பு, இருளில் இருந்து வழி நடத்தும் ஒளியாக இருக்கிறது. உன்னை என் துணையாகப் பெற்றதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடவுளின் ஆசிர்வாதத்தால் உன் அன்பால், புன்னகையால், என் உலகத்தை அற்புதமாக வைத்திருக்கிறாய். என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத உன் அன்பில் மீண்டும் ஒரு வருடம் கழிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். பின்குறிப்பாக, “நம்மைப் பற்றிய வதந்திகள் தவிடு பொடியாகட்டும் ” என்றும் தெரிவித்துள்ளார்.