

பாவனா கடத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் கமல் கூறியதாவது:
''ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று கூறியதை நான் தவறு என்று சொல்லவில்லை. சிஸ்டம் சரியில்லை என்று சுமார் ஓராண்டுக்கு முன்னதாக நான் கூறினேன். அந்தக் கருத்தை முதலில் கூறியது நான்தான். என் கருத்தையே ரஜினியும் சொல்லி இருக்கிறாரே என்று தோன்றியது.
பாவனா கடத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு மார்க் போட மாட்டேன். ஓட்டு மட்டுமே போடுவேன். அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் இருக்கத்தான் செய்கிறது.
எனது பல படங்களின் வெளியீட்டின்போது பலரும் எதிர்த்தபோது அரசும், மக்களும் வேடிக்கை பார்த்தார்கள்'' என்றார் கமல்.