உதவி இயக்குநர் மீது வழக்கு: முதல்வரை டேக் செய்து பா.ரஞ்சித் ட்வீட்

விடுதலை சிகப்பி மற்றும் பா.ரஞ்சித்
விடுதலை சிகப்பி மற்றும் பா.ரஞ்சித்
Updated on
1 min read

சென்னை: தனது உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தமைக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண்டன அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்து கடவுள்களான பகவான் ராமர், சீதை மற்றும் அனுமனை இழிவுபடுத்தும் விதமாக கவிதை வெளியிட்டதாக பாரத் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், விடுதலை சிகப்பி மீது புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

“இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி.

இதை புரிந்து கொள்ளாத பட்டியலின விரோத கொள்கை கொண்ட பாஜக, இந்து பாசிச அமைப்புகளுக்கும், அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வழக்கு தொடுத்திருக்கும் தமிழக காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள்!” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல் துறை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in