ஜவானுக்காக தமிழில் பாடிய ஷாருக்கான்!

ஷாருக்கான்
ஷாருக்கான்
Updated on
1 min read

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். ரெட் சில்லிஸ் தயாரிக்கும் இந்தப்படம், செப். 7-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஷாருக்கான் கூறியதாவது:

‘ஜவான்’ ஒரு புது வகை படைப்பு. இயக்குநர் அட்லீ, மாறுபட்ட 2 ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தப் படத்தைப் பொருத்தவரை, அட்லீ மற்றும் அவர் குழுவினர்தான் மாஸ். அவர்களின் ஸ்டைல், அணுகுமுறை மிகவும் உற்சாகப்படுத்தியது.

இதில் நடித்திருக்கும் நயன்தாரா அழகானவர். இனிமையானவர். அவருடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. விஜய் சேதுபதி அடக்கமான மனிதர். சிறந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அட்லீயும், அனிருத்தும் இணைந்து, என்னைத் தமிழில் சில பாடல் வரிகளைப் பாட வைத்துள்ளனர். சரியாக உச்சரித் திருக்கிறேன் என நம்புகிறேன்.

இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in